பிரபல தயாரிப்பாளர் குக்கு கோலி காலமானார்!
பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான குக்கு கோலி (77) மாரடைப்பு காரணமாக நேற்று (ஆக.25) மும்பையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். இவரின் மறைவுத் செய்தி பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகைச் சேர்ந்த பலரும் இவருக்குத் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
அஜய் தேவ்கனை வைத்து 'பூல் அவுர் காண்டே' என்ற புகழ்பெற்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார். மேலும் இவர் 'சுஹாக்', 'அனாரி நம்பர் 1' போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். இவருக்கு பிரபல நடிகை அருணா இரானி மனைவியாக உள்ளார்.
இவரது மறைவுக்குத் திரையுலகினர், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரின் இறுதிச் சடங்குகள் மும்பையில் உள்ள ஒஷிவாரா மயானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கலை உலகில் இவரது பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும்.