தமிழினப் போராளி விருது பெற்ற பேராசிரியர் பி.யோகீசுவரன் காலமானார்!

 

 

தென்னக எல்லைப் போராட்டங்களில் மாணவப் பருவம் முதலே பங்கேற்றவரும், தமிழினப் போராளி விருது பெற்றவருமான பேராசிரியர் பி.யோகீசுவரன் (90) வயது மூப்பு காரணமாகக் காலமானார். நாகர்கோயிலில் பிறந்த இவர், தமிழர் உரிமைக்காகவும் எல்லைப் போராட்டங்களிலும் முக்கியப் பங்காற்றியவர் ஆவார்.

தமிழர் போராட்ட வரலாறு மற்றும் வடக்கு எல்லைப் போராட்ட வரலாறு உள்ளிட்ட பல முக்கிய நூல்களைப் பேராசிரியர் யோகீசுவரன் எழுதியுள்ளார். தமிழ் வரலாறு மற்றும் போராட்டங்கள் குறித்த அவரது படைப்புகள் முக்கிய ஆவணங்களாகக் கருதப்படுகின்றன.

மறைந்த பேராசிரியர் யோகீசுவரனின் மறைவுக்குத் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.அவரது இழப்பு தமிழ் இலக்கிய மற்றும் சமூக வரலாற்றுத் துறைக்குப் பேரிழப்பாகப் பார்க்கப்படுகிறது