மேஷத்திற்கு லாபம்... மிதுனத்திற்கு வெற்றி - 12 ராசிகளுக்கான துல்லியமான பலன்கள்!

 

மேஷம்: இன்று உங்களுக்குத் தொட்டதெல்லாம் துலங்கும் நாளாக அமையும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சுப செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

ரிஷபம்: நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தள்ளிப்போடுவது சிறந்தது. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

மிதுனம்: புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன காரியங்கள் இன்று கைகூடும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்.

கடகம்: நிதானமான போக்கைக் கடைப்பிடிக்கவும். செலவுகள் கூடினாலும் அதற்கேற்ற வருமானமும் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

சிம்மம்: மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். எடுத்த காரியத்தை முனைப்புடன் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழல் உருவாகும்.

கன்னி: பொருளாதார ரீதியாகச் சிறப்பான பலன்கள் கிட்டும். பழைய கடன்கள் வசூலாகும். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். உத்தியோகத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும்.

துலாம்: இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாடாக அமையும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக உயரும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும்.

விருச்சிகம்: திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஆதாயம் குறையாது. மாணவர்களுக்குக் கல்வியில் ஆர்வம் கூடும். வாகனங்களால் சிறு விரயங்கள் ஏற்படலாம்.

தனுசு: எதிர்பார்த்த நல்ல செய்திகள் தேடி வரும். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பத்தினர் உங்கள் கருத்துக்கு மதிப்பளிப்பார்கள். மனதிற்குப் பிடித்த இடங்களுக்குச் சென்று வருவீர்கள்.

மகரம்: உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். வேலையில் இருந்த தடைகள் விலகும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள்.

கும்பம்: முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்பது நல்லது. தெய்வ வழிபாடு மன அமைதியைத் தரும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம் என்பதால் விழிப்புணர்வு அவசியம்.

மீனம்: நிதானத்துடன் பேச வேண்டிய நாள். தொழில் ரீதியான ரகசியங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் பணிப்பளு குறையும். மாலையில் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவீர்கள்.