5 வயதில் மகள்... கள்ளக்காதலனுடன் ஆசிரியை தற்கொலை!
அஞ்சு வயசுல பெண் குழந்தை இருக்கே... அதோட எதிர்காலம் என்னாகும் என்றெல்லாம் கூட யோசிக்காமல், கள்ளக்காதலனுடன் ஆசிரியை தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி முசிறி அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஆசிரியரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த காட்டுப்புத்தூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் பழனிமலை. இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (29). ஐடிஐ படித்துவிட்டு விவசாய வேலை செய்து வந்தார். திருமணம் ஆகவில்லை. காட்டுப்புத்தூரை அடுத்த சித்தம்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (ஓட்டுநர்).
இவரது மனைவி கீர்த்தனா (23). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 5 வயதில் மகள் உள்ளார். பி.ஏ., பட்டதாரியான கீர்த்தனா, தவிட்டுபாளையம் பகுதியில் உள்ள தனியார் நர்சரி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்திக்கும் கீர்த்தனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இது இரு வீட்டாருக்கும் தெரியவர, கண்டித்துள்ளனர். இதனால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று மதியம் கிருஷ்ணமூர்த்தி, கீர்த்தனா இருவரும் காட்டுப்புத்தூர் அருகே உள்ள தனியார் அரிசி ஆலை அருகே உள்ள மோட்டார் கொட்டகையில் தனித்தனி கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா