undefined

உஷார்... மூளையை தின்னும் அமீபாவிலிருந்து தற்காத்து கொள்ள வழிகாட்டி நெறிமுறைகள்!  

 

மூளையை உண்ணும் அமீபா  பொதுவாக ஆறு, ஏரி, குளங்கள் மற்றும் பராமரிக்கப்படாத நீச்சல் குளம் போன்ற இடங்களில் வாழ்கின்றன. அங்கு நீரில்  மூழ்கி குளிக்கும்போது, அரிதாக சிலருக்கு மூக்கு வழியாக இந்த அமீபா உடலுக்குள் நுழைந்து விடும் அபாயம் உள்ளது. அதன்படி இந்த அமீபா  மூக்கிலிருந்து மூளைக்கு பயணித்து, மூளை திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்தி விடக் கூடியவை.  

மிக மிக அரிதான சந்தர்ப்பங்களில், போதுமான குளோரின் கலக்கப்படாத பொழுதுபோக்கு பூங்காக்களிலும் இந்த அமீபா தொற்று காணப்படுகிறது.  தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை ஆரம்ப அறிகுறிகளாக கருதப்படுகின்றன. இந்த வகை அமீபா வேகமாக வளரக்கூடியது என்பதால், இந்த அறிகுறி தொடங்கிய ஒன்று முதல் 18 நாட்களுக்குள் கடும் பாதிப்பை ஏற்படுத்தி மரணத்துக்கும் வழிவகுத்து விடுகின்றன. 

உடலில் இந்த அமீபா வளரும்போது, கழுத்து இறுக்கமாவது, கவனமின்மை, சமநிலை இழப்பு மற்றும் மாயத்தோற்றங்கள் ஆகியவையும் ஏற்படக்கூடும்.  இந்த அமீபா பாதிப்பை சோதனை மூலம் ஆரம்ப காலங்களில் கண்டறிவது சவாலாக உள்ளது.  லேசான அறிகுறிகள் தென்பட்டதும் உடனடியாக மருத்துவர்களிடம்  உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுவது அவசியம். 


இந்த வகை அமீபாவிலிருந்து தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகள்: 
முறையான பராமரிப்பில்லாத   தண்ணீர் குறைவாக உள்ள நீச்சல் குளங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். 
குளோரின் எனும் கிருமி நாசினி மூலம் நீச்சல் குளங்கள் முறையாகச் சுத்தப்படுத்தப்படுகிறதா என்பதை சரிபார்த்து செல்ல வேண்டும். 
மாசடைந்த குளம் மற்றும் ஏரிகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். 
இந்த அமீபா மூக்கு மூலமே உடலுக்கு செல்கிறது என்பதால் குதித்து மூழ்குவது, டைவ் அடிப்பது இவைகளை தவிர்ப்பது நலம். 
குறிப்பாக மூக்கினுள் தண்ணீர் புகாதபடி பாதுகாப்பாக குளிப்பதன் மூலம் இந்த தொற்றில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?