தூக்கு போட்டு மீனவ பெண்கள் விநோத போராட்டம்!
விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகாவுக்கு உட்பட்ட பெரிய கோட்டக்குப்பம் ஆதிதிராவிடர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும், நடுக்குப்பம் மீனவர்களுக்கும் இடையே நீண்டநாட்களாக இருந்து வந்த சுடுகாடு இடப்பிரச்னை தற்பொழுது ஒரு சுமூக முடிவுக்கு வந்துள்ளது. இருதினங்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இயற்கை எய்திய நிலையில், அவரது சடலத்தை முறைப்படி அடக்கம் செய்யச் சென்றபொழுது மீனவர்கள் அதற்கு திடீரென எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆதிதிராவிட மக்கள் சடலத்துடன் வீதியில் இறங்கி சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த மறியல் போராட்டத்தின் பொழுது ஆத்திரமடைந்த மீனவர்கள் தரப்பினர், எதிர்தரப்பினரின் வீடுகளுக்குள் அத்துமீறிப் புகுந்து அங்கிருந்த பொருள்களைச் சேதப்படுத்தி ஆட்களைக் கொடூரமாகத் தாக்கினர். இந்த வன்முறைச் சம்பவத்தில் 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாகப் பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகாரின் பேரில், நடுக்குப்பம் மீனவர்கள் தரப்பைச் சேர்ந்த 30 பேர் மீது கோட்டக்குப்பம் காவல் நிலைய போலீசார் முறைப்படி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்கும் பொருட்டு வானூர் தாலுகா அலுவலகத்தில் இருதரப்பினரையும் அழைத்து அவசர அமைதிக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கோட்டாட்சியர் முருகேசன், சர்ச்சைக்குரிய மயான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 21 பழுதடைந்த படகுகளையும் இரு நாட்களுக்குள் உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், மீனவர்கள் படகுகளை நிறுத்திக் கொள்ளக் கடற்கரையையொட்டி விரைவில் புதிய இடம் ஒதுக்கித் தரப்படும் என்றும் உறுதியளித்தார்