பொதுமக்கள் அதிருப்தி... 'அண்ணன் சீர்' திட்டத்தில் திடீர் மாற்றம் - தகுதி வரம்பைப் பாதியாகக் குறைத்து அரசாணை வெளியீடு!
தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் 'அண்ணன் சீர்' திட்டத்திற்கான தகுதி வரம்பில் திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வருமான வரம்பு குறைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முந்தைய தேர்தல் வாக்குறுதியின்படி, ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள அனைத்துக் குடும்பப் பெண்களுக்கும் 'அண்ணன் சீர்' வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி, இத்திட்டத்திற்கான தகுதி வரம்பு ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே என்று பாதியாகக் குறைக்கப்பட்டு சுருக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு மாறாக, தகுதி வரம்பு பாதியாகக் குறைக்கப்பட்டிருப்பது இத்திட்டத்தின் கீழ் பயன்பெறக் காத்திருந்த நடுத்தர மற்றும் எளிய மக்களிடையே ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.