பேனர், கட்-அவுட்டுகளுக்கு இன்று முதல் தடை! பருவமழையை முன்னிட்டு அதிரடி உத்தரவு

 

 

தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அக்.1 முதல் பராமரிப்பு தொகை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகளை சுத்தமாகவும் முறையாகவும் பராமரிப்பதற்காக இந்தத் தொகை பயன்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகளுக்கு அதிகபட்சமாக ரூ.5,000 பராமரிப்பு தொகை வழங்கப்படும். நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளுக்கு ரூ.4,000-ம், ஊரக பகுதிகளில் செயல்படும் கடைகளுக்கு ரூ.3,000-ம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் சுகாதாரத்தை மேம்படுத்துதல், கடையைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருத்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளுக்கு இந்தத் தொகையை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், மதுபாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிப்பதைத் தடுக்கும் வகையிலும், கடைகளில் முறையான பராமரிப்பை மேற்கொள்ளும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், வழங்கப்படும் பராமரிப்பு தொகையை மின்கட்டணம் செலுத்துவதற்கோ அல்லது கடைகளில் மேற்கொள்ளப்படும் பழுதுபார்ப்பு பணிகளுக்கோ பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால், டாஸ்மாக் கடைகளின் பராமரிப்பு தொடர்பான செலவுகளுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. அக்.1 முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருவதால், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுமா என்பதும் கண்காணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ்மாக் கடைகளுக்கு வழங்கப்படும் தொகை, அந்தக் கடை அமைந்துள்ள உள்ளாட்சி அமைப்பின் அடிப்படையில் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.