புதுச்சேரியில் அரசு ஐஸ்கிரீம் தொழிற்சாலை - உற்பத்தியை இரட்டிப்பாக்க முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!

 

புதுச்சேரி அரசு கூட்டுறவு நிறுவனமான 'பாண்லே' மூலம் ரூ.34.35 கோடி மதிப்பீட்டில் புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் என். ரங்கசாமி அறிவித்துள்ளார்.

பாண்லே நிறுவனத்தின் சார்பில் ரூ.34.35 கோடி செலவில் புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலை நிறுவப்பட உள்ளது. தற்போது நாளொன்றுக்கு 10,000 லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய தொழிற்சாலை செயல்படத் தொடங்கும்போது உற்பத்தித் திறன் 20,000 லிட்டராக இரட்டிப்பாகும்.

புதுச்சேரியில் பால் உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கும் நோக்கில், ரூ.112 கோடி மதிப்பில் அதிநவீன தானியங்கி பால் பதப்படுத்தும் தொழிற்சாலையும் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.