புதுவை முதல்வரின் தனிச்செயலாளர் மரணம்... அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து!
புதுச்சேரி முதல்வரின் தனிச்செயலாளர் தமிழ் அரிமா, அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்.
புதுவை மூலக்குளம் ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் தமிழ் அரிமா (34). இவர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் உதவி தனி செயலராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த வாரம் சொந்த வேலையாக இருசக்கர வாகனத்தில் சின்னகாலாப்பட்டு ஈசிஆர் சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்தில் தமிழ் அரிமாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கனக செட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!