கோயில் கும்பாபிஷேக விழாவில் பெண்களுடன் இணைந்து கும்மியடித்து நடனமாடிய சி.விஜயபாஸ்கர்... வைரல் வீடியோ!
Nov 24, 2026, 13:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் நடைபெற்ற ஸ்ரீ சின்னம்மாள் மற்றும் ஆவுடை முத்து கருப்பர் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று (நவ.24) கலந்துகொண்டார்.
விழாவிற்கு வருகை தந்த அவர், அங்கிருந்த பெண்கள் மற்றும் தாய்மார்களுடன் இணைந்து மிகுந்த உற்சாகத்துடன் கும்மியடித்து நடனமாடி மகிழ்ந்தார்.
மக்களோடு மக்களாக இணைந்து எவ்விதத் தயக்கமுமின்றி அவர் கும்மியடித்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போன்களில் பதிவு செய்தனர்.இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகின்றன.