“கூலிங்கா பீர் கொடுயா...” டாஸ்மாக் கடையில் தகராறு! போலீசாரிடமும் வாக்குவாதம்.. வைரல் வீடியோ

 

 

புதுக்கோட்டை அருகே அரசு மதுபானக் கடையில் கூலிங் பீர் கேட்டு ஒருவர் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை அருகே உள்ள அரசு மதுபானக் கடைக்கு சென்ற மது பிரியர் ஒருவர், குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட குளிர்ந்த பீர் பாட்டிலை கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது பீர் தொடர்பாக ஊழியரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

allowfullscreen

ஒரு கட்டத்தில், “கூலிங்கா கொடுயா... இல்லனா அடிச்சு ஒடச்சிடுவேன்” என அந்த நபர் மிரட்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரித்துள்ளனர். அப்போதும் அவர் போலீசாரிடம் மரியாதையற்ற முறையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

டாஸ்மாக் கடை ஊழியரிடம் தகராறு செய்தது முதல் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தது வரை நடந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் வீடியோவாக பதிவாகியுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. வீடியோவில் இடம்பெற்றுள்ள நபர் மீது ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது தொடர்பான கூடுதல் விவரங்கள் வெளியாகவில்லை.