நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்த புகழேந்தி மாறன்!

 

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய புகழேந்தி மாறன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாகத் தன்னை இணைத்துக் கொண்டார்.

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் முன்னிலையில் புகழேந்தி மாறன் அக்கட்சியில் இணைந்தார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகழேந்தி மாறன், "இந்த புதிய அரசியல் பாதையில் தமிழக மக்களின் வளர்ச்சிக்கும், தமிழ் மற்றும் தமிழர் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து அயராது பாடுபடுவேன்" என உறுதி அளித்துள்ளார்.