புனேவில் அதிர்ச்சி: காதலியைக் கொலை செய்துவிட்டு சடலம் அருகே விடிய விடிய அமர்ந்திருந்த காதலன்!

 

 

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த 27 வயது இளம்பெண் கோமல் தஹாலே மற்றும் ஷுபம் கல்பாண்டே ஆகியோர், டேட்டிங் செயலி மூலம் பழகி காதலித்து வந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாகத் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கப் பெற்றோர் முடிவு செய்திருந்தனர்.

In Pune's Hinjewadi IT hub, software engineer Shubham Kalbande fatally assaulted his live-in partner Komal Dahale after a quarrel fueled by jealousy and suspicions of infidelity. The couple, both employed in tech firms and living together with family approval, had a history of arguments. Following a dinner outing, the argument escalated around 3 am resulting in Komal's death. Shubham stayed beside her body overnight and called police at dawn. He was arrested, and investigations continue. Read More: https://t.co/x28lJWLpOO #PuneCrime #PuneMurder #Hinjewadi #PuneNews #CrimeNews #maharashtra #ReporterDiary

— IndiaToday (@IndiaToday) November 24, 2026

இதற்கிடையே கடந்த 3 மாதங்களாக நடத்தையில் சந்தேகப்பட்டு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று நண்பர்களுடன் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, ஹிஞ்சவாடி பகுதியில் கோமல் தங்கியிருந்த விடுதி அறைக்கு நள்ளிரவு 12 மணிக்குத் திரும்பியுள்ளனர்.

அப்போது நள்ளிரவு 3 மணியளவில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த ஷுபம் கோமலைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் மயங்கி உயிருக்குப் போராடிய கோமலுக்கு உடனடியாக உதவி செய்யாமல், விடிய விடிய அவரது உடல் அருகிலேயே அமர்ந்து ஷுபம் அழுது கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

காலை சுமார் 6.30 மணியளவில் அவரே போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட கோமல் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், விசாரணையில் கொலையை ஷுபம் ஒப்புக் கொண்டதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.