வேணாம்மா... 8-வது மாடியிலிருந்து குதித்த தாய்... கையைப் பிடித்துக் காப்பாற்றப் போராடிய குழந்தை நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ! 

 

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே தலேகான் பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக 35 வயது பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பின் 8-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். தலேகான் எம்.ஐ.டி.சி பகுதியில் வசித்து வந்த பிரதிபா சங்கர் என்பவருக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதமே இந்த விபரீத முடிவுக்குக் காரணமாகத் தெரிகிறது. ஆத்திரத்தில் அவர் பால்கனியிலிருந்து குதிக்க முயன்றபோது, அவரது பிஞ்சு குழந்தை தாயின் கையைப் பிடித்துக் கொண்டு காப்பாற்றப் போராடியது பார்ப்போரை உலுக்கியது.

இது குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பிரதிபாவின் கணவர் மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலைக்கான முழுமையான காரணங்கள் குறித்து ஆராயப்பட்டு வரும் நிலையில், பிரதிபாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குடும்பப் பிரச்சனைகளுக்குத் தற்கொலை தீர்வாகாது என்றும், கோபத்தில் எடுக்கும் முடிவுகள் பிஞ்சு குழந்தைகளின் வாழ்க்கையைப் பாதிக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.