ரூ.500 சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு வென்ற லாரி டிரைவர்!

 

 

பஞ்சாப் மாநிலம் மொகாலியைச் சேர்ந்த லாரி டிரைவர் பல்ஜிந்தர் சிங்கிற்கு, தீபாவளி பம்பர் லாட்டரியில் ரூ.12 கோடி முதல் பரிசு கிடைத்துள்ளது.

மொகாலி மாவட்டம் தேரா பஸ்ஸி பகுதியிலுள்ள ஹம்யுன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பல்ஜிந்தர் சிங். டிப்பர் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வரும் இவர், சிறிய அளவில் விவசாயமும் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் பண்டிகைக் காலங்களில் மட்டும் லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார். இந்தப் பழக்கத்தை குடும்பத்தினருக்குத் தெரியாமல் ரகசியமாகத் தொடர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், மொகாலி ஜிராக்பூரில் உள்ள கடையில் ரூ.500 கொடுத்து வாங்கிய பஞ்சாப் மாநில 'டியர் தீபாவளி பம்பர் 2026' லாட்டரி சீட்டுக்கு ரூ.12 கோடி முதல் பரிசு கிடைத்துள்ளது. நவம்பர் 16ஆம் தேதி குலுக்கல் நடைபெற்றது.பரிசுத் தொகையில் கணிசமான பகுதியை தனது இரண்டு குழந்தைகளின் கல்விக்காகச் செலவிடப் போவதாக பல்ஜிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.