ரூ20/-க்காக ஒண்ணுக்குள்ள ஒண்ணு... 6 பர்ஸ்களை பிரித்து துரித உணவகத்தில் கடைக்காரரின் பொறுமையைச் சோதித்த பெண்... வைரல் வீடியோ!
வெளிநாடு ஒன்றில் உள்ள துரித உணவுக் கடைக்கு வாடிக்கையாளர் பெண் ஒருவர் உணவை வாங்குவதற்காக வந்துள்ளார். அவர் வெறும் 20 ரூபாய் மதிப்பிலான ஸ்ப்ரிங் ரோல் மற்றும் சிப்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடுவதற்காக ஆர்டர் செய்துள்ளார். உணவிற்கான பணத்தைக் கொடுப்பதற்காக அந்தப் பெண் செய்த விசித்திரமான காரியம் கடைக்காரரை நிலைகுலையச் செய்துள்ளதோடு, அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரிய அளவில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
ดูจบแล้วรู้เลยว่าเงิน 20 บาทหายากแค่ไหน 555555555555555 pic.twitter.com/a5yG7qFQjT
— 민하연 🍀 พชรฐากูร (@minhayeonx) July 2, 2026
அந்தப் பெண் ஸ்ப்ரிங் ரோலை ஆர்டர் செய்துவிட்டு கடைக்காரர் அதைத் தயாரித்துக் கையில் கொடுக்கும் போது அதன் விலை எவ்வளவு எனக் கேட்டுள்ளார். அதற்கு அவர் 20 ரூபாய் எனக் கூற, அந்தப் பெண் பணத்தை எடுப்பதற்காகத் தனது பைக்குள் இருந்து ஒரு பர்ஸை எடுத்துள்ளார். ஆனால் அந்தப் பர்ஸைத் திறந்தால் அதற்குள் மற்றொரு பர்ஸ், அதைத் திறந்தால் அதற்குள் இன்னொன்று என மொத்தம் 6 முறை உள்ளுக்குள் இருந்த பர்ஸ்களை வரிசையாக எடுத்து, இறுதியாக அதிலிருந்த சில்லறைக் காசைப் பொறுமையாக எடுத்துக் கொடுத்துள்ளார்.
பணத்தைப் பெற்றுக்கொண்டு கடைக்காரர் பொருளைக் கொடுத்த பிறகு, அவரிடம் வாங்கிய மீதி சில்லறையையும் அதேபோல் 6 பர்ஸ்களுக்குள் ஒவ்வொன்றாக அடுக்கு வைத்துவிட்டு அவர் கிளம்பிச் சென்றுள்ளார். கடைக்காரரின் பொறுமையை முழுமையாகச் சோதிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த வேடிக்கையான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. பாதுகாப்புக்காகப் பர்ஸிற்குள் பர்ஸ் வைக்கும் இத்தகைய வினோதமான பழக்கத்தைக் கண்டு நெட்டிசன்கள் பலரும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.