உலக பேட்மிண்டனில் பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி.. தொடரிலிருந்து வெளியேற்றம்!

 

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். 

டெல்லியில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 'ரவுண்ட் ஆப் 16' சுற்றுப் போட்டியில் உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் வாங் ஷி யிடம் தோல்வியடைந்தார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 11-21, 21-15, 17-21 என்ற செட் கணக்கில் போராடி சிந்து தோல்வியடைந்தார்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் தனது 6-வது பதக்கத்தைக் கைப்பற்றும் நோக்கில் களம் கண்ட பி.வி. சிந்துவின் கனவு, இந்த அதிர்ச்சித் தோல்வியின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.