தீபாவளிக்குள் ரேஷன் கடைகளில் தரமான அரிசி: அமைச்சர் பி. வெங்கடரமணன் தகவல்!

 

வரும் தீபாவளிப் பண்டிகைக்குள் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொதுமக்களுக்கு உயர்தர அரிசி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் பி. வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.

ரேஷன் அரிசியின் தரத்தை உறுதிசெய்யும் பொருட்டு, நெல் கொள்முதல் நிலையங்கள், கிடங்குகள் மற்றும் அரிசி ஆலைகளில் அதிகாரிகள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நுகர்வோருக்கு உயர்தர அரிசியை வழங்கும் நோக்கில், சன்ன ரக நெல் கொள்முதலை கணிசமாக அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசி தரம் குறித்து வரும் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருவதாகவும், தீபாவளிக்குள் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தரமான அரிசி முழுமையாகக் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.