"திரிஷா வீட்டில் வேறு முகம்” - முதல்வர் விஜய்யை விமர்சித்த ரகுபதி!

 

தமிழகச் சட்டமன்றத்தில் தவெக மற்றும் திமுக இடையே நாளுக்கு நாள் அரசியல் மோதல்கள் தனிநபர் விமர்சனங்களாக மாறி வரும் நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, முதலமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது பிறந்தநாள் புகைப்பட விவகாரத்தைக் கையில் எடுத்துப் பகிரங்கமாகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற திமுக கட்சி பொது நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ரகுபதி, முதலமைச்சர் விஜய் குறித்துப் பேசிசுகையில், "முதலமைச்சர் விஜய் தனது பிறந்தநாளின் போது நடிகை திரிஷாவுடன் இணைந்து கேக் வெட்டியதாகக் கூறப்படும் புகைப்படம் ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில், திரிஷா வீட்டில் அவர் முற்றிலும் வேறு ஒரு தோற்றத்தில், கலர் சட்டை அணிந்து, க்ளீன் ஷேவ் செய்த முகத்துடன் காட்சியளிக்கிறார்."

தொடர்ந்து தவெகவின் அரசியல் வளர்ச்சியைத் தொடக்கத்திலேயே திமுக தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும் என்று ரகுபதி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

முதலமைச்சர் விஜய்யை அரசியல் ரீதியாக அன்றைக்கே நாம் சரியான கேள்விகளை எழுப்பித் தடுத்திருந்தால், இன்றைக்கு அவர் இந்த அளவிற்கு வளர்ந்து வந்து நமக்கு சவாலாக நின்றிருக்க மாட்டார் என்று ரகுபதி தொண்டர்கள் மத்தியில் குறிப்பிட்டார். முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரும் நடிகை திரிஷாவும் ஒரே இடத்தில் இருக்கும் படியான புகைப்படம் ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் விவாதப் பொருளாக மாறியிருந்தது.