மகரத்தில் ராகு, கடகத்தில் கேது... டிச.5 முதல் இந்த 6 ராசிக்காரர்களுக்கு தடைகள் விலகும்... அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும்! 

 

ஜோதிட சாஸ்திரத்தில் நிழல் கிரகங்களாகக் கருதப்படும் ராகு மற்றும் கேது பகவானின் பெயர்ச்சி 12 ராசிகளிலும் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி, வரும் டிசம்பர் 5-ம் தேதி இரவு 10.33 மணிக்கு ராகு பகவான் மகர ராசிக்கும், கேது பகவான் கடக ராசிக்கும் பெயர்ச்சியாக உள்ளனர். இந்தக் கிரக மாற்றத்தால் நீண்ட நாட்களாக நிலவி வந்த தடைகள் மற்றும் பிரச்சனைகள் விலகி, குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்குப் புதிய முன்னேற்றமும் நிவாரணமும் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தில் நிகழும் இந்த முக்கியப் பெயர்ச்சியில், ராகு மகர ராசிக்கும், கேது கடக ராசிக்கும் இடம் பெயர்கின்றனர். இதனுடன் சனி வக்கிர நிவர்த்தியும் இணைவதால், கிரக நிலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உருவாகின்றன.

இந்த நிழல் கிரகங்களின் நகர்வால் மேஷம், ரிஷபம், சிம்மம், கன்னி, விருச்சிகம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளுக்குச் சாதகமான சூழலும் ஓரளவு நிவாரணமும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1. மேஷம் : மேஷ ராசிக்காரர்களுக்குப் பணி தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக வேலை மாற்றம் குறித்து யோசித்து வந்தவர்களுக்குப் புதிய மற்றும் சாதகமான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளுடன் இணக்கமான சூழல் உருவாகும். தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்குப் புதிய நபர்களின் அறிமுகத்தால் வளர்ச்சி வாய்ப்புகள் கிடைக்கும்; குடும்பத்தினரின் ஆதரவும் உத்வேகமும் மனதிற்குப் பலம் சேர்க்கும்.

2. சிம்மம் : சிம்ம ராசியிலிருந்து கேது விலகுவதும், 6-ஆம் இடத்தில் ராகு அமர்வதும் தொழில் மற்றும் வேலை சார்ந்த விஷயங்களில் முன்னேற்றத்தைத் தரும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிப்பதுடன், சரியான திட்டமிடல் மூலம் வெற்றிகளைப் பெற முடியும். தொழில் போட்டியாளர்கள் மற்றும் எதிரிகளின் தொல்லைகள் குறையும். நீண்ட நாள் உடல்நலக் குறைவுகளில் நிவாரணம் கிடைப்பதற்கும், தடைபட்டு நின்ற நிதி சார்ந்த பணிகளைத் திட்டமிட்டு முடிப்பதற்கும் சாதகமான காலம் அமையும்.

3. கன்னி : கன்னி ராசிக்காரர்களுக்கு நீண்ட காலமாக நீடித்து வந்த நிதிப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்; புதிய வருமான வழிகளும் திறக்கும். கடின உழைப்பு மற்றும் திட்டமிடலால் பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரத்தில் லாபகரமான வாய்ப்புகளும், மாணவர்களுக்குக் கல்வியில் சாதகமான சூழலும் உருவாகும். பூர்வீகச் சொத்து தொடர்பான சிக்கல்கள் முடிவுக்கு வரலாம்; பிள்ளைகளின் ஆதரவு மனதிற்கு ஆறுதலைத் தரும்.

4. விருச்சிகம் : விருச்சிக ராசிக்காரர்களுக்குப் பணிகளில் முன்னேற்றமும், குடும்பச் சூழலில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். சிலருக்குப் புதிய வணிக ஒப்பந்தங்கள் கைகூடும்; பழைய முதலீடுகள் மூலமாகவும் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. செயல்பாடுகளில் துணிச்சலும் தன்னம்பிக்கையும் கூடும். கடினமான சூழ்நிலைகளைச் சமாளிக்கச் சகோதரர்களின் ஆதரவும் ஆலோசனைகளும் பெரிதும் கைகொடுக்கும்.

5. மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ள ராகுவால் நிதிநிலையில் சாதகமான சூழலும், வருமான உயர்வும் ஏற்படும். நீண்ட காலமாக முடங்கிக் கிடந்த பணத்தை மீட்பதற்கான வாய்ப்புகளும் அமையும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதுடன், தொழிலை விரிவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் வெற்றியளிக்கும். மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு மன அமைதியைத் தரும்.