காங்கிரஸ் வேட்பாளர் கைது - பாஜக பழிவாங்குவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
மேற்கு வங்காளத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பழைய கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளத்தின் நந்திகிராம் இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான், பழைய கொலை வழக்கு ஒன்றில் திடீரெனக் கைது செய்யப்பட்டுள்ளார்.
மம்தா பானர்ஜி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த சில மணி நேரங்களிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் வேட்பாளரின் கைதுக்குப் பின்னால் அரசியல் பழிவாங்கல் இருப்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வன்மையாகக் குற்றம்சாட்டியுள்ளார். பாரதிய ஜனதா கட்சிக்கு ஜனநாயகத் தேர்தலில் துளியளவும் நம்பிக்கை இல்லை என்றும், வாக்குகள் மற்றும் ஆட்சிகளைக் கைப்பற்றி எப்படியாவது அதிகாரத்தைத் தக்கவைக்க மட்டுமே பாஜக முயன்று வருவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.