தீபாவளி ஸ்பெஷல்... இனிப்புக்கடையில் ஜிலேபி செய்த ராகுல் காந்தி!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, பழைய டெல்லியில் உள்ள புகழ்பெற்ற இனிப்பு கடைக்கு சென்றார். அங்கு அவர் ஜிலேபி, லட்டு போன்ற இனிப்புகளை தனது கையால் செய்தார். இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த ராகுல்காந்தி, மக்களிடம் தீபாவளியை தங்கள் வீடுகளில் சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அவர் கூறியது, “தீபாவளியின் உண்மையான இனிப்பு என்பது வெறும் சாப்பாட்டில் மட்டுமல்ல; உறவுகள் மற்றும் இணக்கத்திலும் உள்ளது”. மேலும், “இந்தியா மகிழ்ச்சியின் தீபங்களால் ஒளிரட்டும்; மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அன்பின் ஒளி ஒவ்வொரு வீட்டிலும் பரவட்டும்” என்று வாழ்த்தியுள்ளார்.
வீடியோவில், இனிப்பு கடை உரிமையாளர் ராகுல்காந்திக்கு கூறியதாக தெரிகிறது: “உங்கள் பாட்டி, தந்தை மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் கடையில் இருந்து இனிப்புகள் வழங்கி இருக்கிறோம். இனி உங்கள் திருமணத்துக்கு வழங்குவதற்காக காத்திருக்கிறோம்”. இதற்கு ராகுல் காந்தி புன்னகையுடன் பதிலளித்தார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது, மக்கள் ராகுல் காந்தியின் எளிமையான தோற்றமும் இனிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட தருணங்களையும் மிகவும் ரசித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!