மாவட்டத் தலைவர்களுக்கு ராகுல் காந்தி கடும் எச்சரிக்கை!

 

மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான 10 நாள் பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் பங்கேற்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உட்கட்சிப் பூசல்கள் குறித்து நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி பெரிதாக வளர்ச்சியடையாமல் இருப்பதற்கு உட்கட்சியினுள் நிலவும் பூசல்களே மிகப்பெரிய முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன.

கட்சியில் உள்ள அனைத்து நில நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அரவணைத்துச் செல்லாத மாவட்டத் தலைவர்களுக்குக் கட்சியில் இடமில்லை. கட்சி அமைப்பை அடிமட்ட அளவில் பலப்படுத்தவும், வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ளவும் அனைவரும் வேறுபாடுகளைக் மறந்து இணைந்து செயல்பட வேண்டும்.