சீக்கிரம் வீட்டுக்கு கிளம்புங்க... இரவு சென்னை உட்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவாரூர், நாகை ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று இரவு   மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்க்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மதுரை, திண்டுக்கல், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.