இன்று சென்னை உட்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
Nov 22, 2026, 06:40 IST
தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு குறித்த முக்கிய அப்டேட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், மற்ற பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி ஆகிய 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதனைத் தொடர்ந்து, நாளை கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது