பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை உடனடியா கவனிங்க... முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு  உத்தரவு!

 

தென்மேற்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய முதலமைச்சர் விஜய், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல ஏதுவாக தற்காலிக முகாம்களைத் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் தடையின்றி கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மழைக்கால பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்யும் வகையில் அவசரக்கால மீட்புக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் விரைந்து நிறைவு செய்து, இயற்கை சீற்றங்களால் எற்படும் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் முழு விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.