undefined

 வீடுகளுக்குள்  புகுந்த மழைநீர் ... மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு!  

 


தமிழகத்தில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகம் உட்பட  தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை வியாழக்கிழமை முதலே  மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

சாத்தூர்  மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளான இருக்கன்குடி,மேட்டமலை படந்தால்,சத்திரப்பட்டி, ஏழாயிரம்பண்ணை,தாயில்பட்டி, வெம்பக்கோட்டை,பெத்து ரெட்டி பட்டி, சின்னதம்பியாபுரம்  பகுதிகளில் இடிமின்னலுடன் 2 வது நாளாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று டிசம்பர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை காா்த்திகை வழிபாடு நடைபெறவுள்ள நிலையில், சந்தையில் அகல் விளக்கு மற்றும் பிற பொருள்கள் வாங்க முடியாமல் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.  


விடிய விடிய பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம் தேங்கி நிற்கிறது. இதில் பெத்து ரெட்டி பட்டி, சின்னதம்பியாபுரம்  பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து கிராமம் தனித்தீவாக காட்சியளிக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாத்தூர் வெம்பக்கோட்டை ஏழாயிரம் பண்ணை  பகுதிகளில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலை பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது.  நீராவிபட்டி  பகுதிகளில் கண்மாய்கள் நிறைந்து விவசாய நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!