மலர் மாலை, சிறப்புப் பூஜை, மேளதாளம்... குரங்குக்கு மரியாதையுடன் இறுதி விடை... வைரல் வீடியோ!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கிற்கு, மனிதர்களுக்கு செய்வது போலவே மேளதாளங்கள் முழங்க இறுதி ஊர்வலம் நடத்தி பொதுமக்கள் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
In #Jodhpur, #Rajasthan, a monkey was given a funeral procession and last rites. The monkey had died after coming into contact with an electric current in a well. Social workers organized a funeral procession for the monkey and performed its cremation. Before the cremation, the monkey was given a ritual bath.
— Siraj Noorani (@sirajnoorani) November 16, 2026
ஜோத்பூர் நகரின் விஜய் சௌக் பகுதியில் உள்ள ஜீவன்தாஸ்ஜி கிணறு அருகே நேற்று (நவம்பர் 16) குரங்கு ஒன்று சுற்றித்திரிந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அந்தக் குரங்கு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சோகமடைந்தனர். இதையடுத்து குரங்கிற்கு உரிய மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்ய முடிவு செய்தனர். அதன்படி, குரங்கின் உடலுக்கு புனித நீராட்டி, மலர் மாலைகள் அணிவித்து சிறப்புப் பூஜைகள் செய்தனர்.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பாடையில் குரங்கின் உடலை வைத்து, மேளதாளங்கள் முழங்க இறுதி ஊர்வலம் நடத்தினர். விஜய் சௌக் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் இந்த ஊர்வலத்தில் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட குரங்கின் உடல் முறைப்படி தகனம் செய்யப்பட்டது.உயிரிழந்த விலங்குக்கு பொதுமக்கள் ஒன்றிணைந்து இவ்வளவு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.