பள்ளி கேண்டீனில் சாப்பிட்ட 12ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு... கதறித் துடிக்கும் பெற்றோர்!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிரின்ஸ் சோனி என்ற 17 வயது மாணவன் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் கடந்த புதன்கிழமை காலை பள்ளியில் உள்ள கேண்டீனில் உணவு சாப்பிட்டுள்ளார். உணவு சாப்பிட்ட சில நிமிடங்களில் பிரின்ஸ் சோனி பள்ளி வளாகத்தில் திடீரென மயங்கி விழுந்தார்.
மாணவன் உயிரிழந்த நிலையில், மாணவனை மீட்ட பள்ளி நிர்வாகத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் பள்ளியிலேயே வைத்துள்ளனர். பின்னர், அந்த மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற பெற்றோர், மாணவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு மாணவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பள்ளி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவன் உயிரிழந்ததற்கான உண்மையான காரணம் குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.