ராஜேந்திர பாலாஜி மனு தள்ளுபடி - இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு!
ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில், தங்களை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடமும் ரூ.3 கோடி வரை மோசடி செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இவ்வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி ராஜேந்திர பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த விடுவிப்பு மனுவை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம், அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கையாக, இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.