ஷாக் வீடியோ... முதல்வர் காலில் விழும் ரஜினிகாந்த்!! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!
நடிகர் ரஜினிகாந்த் உத்தர பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவருடைய ஜெயிலர் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் ரஜினிகாந்த் ஆன்மீக சுற்றுலாவில் செம்ம பிசியாக உள்ளார் ரஜினிகாந்த். முதலில் இமயமலைக்கு சென்ற ரஜினி, அங்கு ஒரு வாரம் தங்கி அங்குள்ள ஆன்மீக தலங்களில் சாமி தரிசனம் செய்தார். அங்கிருந்து ஜார்க்கண்ட் சென்ற ரஜினிகாந்த், ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தார்.
ஜார்க்கண்ட்டிலிருந்து உத்தர பிரதேசம் சென்ற ரஜினிகாந்த்,
அம்மாநில துணை முதல்வருடன் ஜெயிலர் படம் பார்த்தார் உபி முதல்வரை சந்திக்க நேரில் சென்ற ரஜினிகாந்த், அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார். இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகர் ரஜினிகாந்த்திற்கு வயது 72 . உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கோ 51 வயது தான். தன்னை விட 21 வயது இளையவரின் காலில் ரஜினிகாந்த் விழுந்ததை கண்டு அவரது ரசிகர்கள் கொதித்தெழுந்தனர். அவரின் இந்த செயலுக்கு கண்டன பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
காலா படத்தில் தன் காலில் சிறுமி ஒருவர் விழ வரும் போது அதெல்லாம் வேண்டாம் என தடுத்து பஞ்ச் டயலாக் பேசினார். ஆனால் ரியல் லைப்பில் வயது குறைவானவர் காலில் விழுவதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்கின்றனர் ரஜினி ரசிகர்கள். மேலும் சிலர் ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகும் முன்னர் ரஜினி இப்படி செய்திருந்தால் ஜெயிலரை வச்சி செஞ்சிருப்பாங்க என கிண்டலடித்து வருகின்றனர். அவருடைய வெறித்தனமான ரசிகர்கள் “யோகி ஜி உத்திர பிரதேசத்தின் முதல்வர் மட்டுமல்ல, நாதசைவ சம்பிரதாயத்தை பின்பற்றும் கோரக்நாத் மடத்தின் பீடாதிபதியும் கூட. அவரைக் கண்டால் நமஸ்கரிக்க வேண்டும் என்பது தர்மம். அதையே கடைபிடிக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி” என தங்கள் தலைவரை விட்டுக்கொடுக்காமல் பேசி வருகின்றனர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!