பிரபல நகைச்சுவை நடிகர் ராஜீவ் தாகூர் தந்தை காலமானார்!

 

 

பிரபல நகைச்சுவை நடிகர் ராஜீவ் தாகூரின் தந்தை காலமானார். இந்தத் துயரச் செய்தியை மற்றொரு பிரபல நகைச்சுவை நடிகரான கிருஷ்ணா அபிஷேக் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தூரில் நடைபெறவிருந்த மேடை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ராஜீவ் தாகூரும் கிருஷ்ணா அபிஷேக்கும் செல்லவிருந்தனர். பயணம் தொடங்குவதற்குச் சற்று முன்பு ராஜீவ் தாகூரின் தந்தையின் மறைவுச் செய்தி வெளியாகியுள்ளது. இதனால் தனது குடும்பத்தினருடன் இருப்பதற்காக ராஜீவ் தாகூர் பயணத்தை ரத்து செய்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் ராஜீவ் தாகூரின் தந்தையின் மறைவு அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த அவரது தந்தைக்குத் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.