undefined

கால்நடை மருத்துவ படிப்புக்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!!

 

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு 660 இடங்கள் உள்ளன. 
சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. இதுபோக, தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன.


இந்நிலையில், 2023-24 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு கடந்த ஜூன் 12 முதல் 30-ம் தேதி வரை விண்ணப்ப பதிவு நடைபெற்றது. இந்த படிப்புகளுக்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் சுமார் 22 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர்.கால்நடை மருத்துவ படிப்பிற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. இந்த தரவரிசைப் பட்டியலை https://adm.tanuvas.ac.in, https://tanuvas.ac.in என்ற இணைய தளங்களில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப் படிப்பிற்கான தரவரிசை பட்டியலில் 31 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பி.டெக் தொழில்நுட்ப படிப்பிற்கான தரவரிசையில் ஒருவர் 200க்கு 199.5 மதிப்பெண் பெற்றுள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் சேலம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் 200க்கு 200 பெற்றுள்ளனர்.
இந்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது. சிறப்புக் கலந்தாய்வு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு கலந்தாய்வு மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு மட்டும் நேரடியாக நடைபெறும் எனவும் மற்ற அனைத்து இடங்களுக்கும் ஆன்லைன் மூலம் மட்டுமே கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!