“90 அடி உயர நீர்வீழ்ச்சியில் இருந்து குதிக்கச் சொன்னார்கள்” - நடிகை ராஷ்மிகா மந்தனா!
நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள 'மைசா' திரைப்படத்தின் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் படத்தின் படப்பிடிப்பின் போது தான் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் சுவாரஸ்யமான அனுபவங்களை அவர் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
இப்படத்தில் இடம்பெறும் ஒரு குறிப்பிட்ட காட்சிக்காக, 90 அடி உயரமுள்ள நீர்வீழ்ச்சியில் இருந்து குதிக்க வேண்டும் என்று படக்குழுவினர் தன்னிடம் கேட்டதாக ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.
அந்த உயரத்தைக் பார்த்ததும் தான் மிகவும் பயந்துபோனதாகவும், இருப்பினும் தாம் ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் உண்மைத்தன்மைக்கும் நேர்மைக்கும் அது அவசியமானது என்பதால் அந்தச் சவாலை ஏற்றுத் துணிந்து நடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஷ்மிகா மந்தனா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'மைசா' திரைப்படம், வரும் நவம்பர் 27-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.