வெளிநாடு தப்பியயோடிய ரத்தீஷ் - தவெக ஆட்சி முடியும் வரை அங்கேயே தங்கியிருக்க முடிவாம்!
டாஸ்மாக் தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள ரத்தீஷ், வெளிநாட்டிற்குத் தப்பியோடிவிட்டதாகவும், தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு அவர் உடனடியாகத் இந்தியா திரும்பும் எண்ணத்தில் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாஸ்மாக் முறைகேடு புகார்களைத் தொடர்ந்து தேடப்படும் நபராகக் கருதப்படும் ரத்தீஷ், ஏற்கனவே துபாய் கோல்டன் விசா வைத்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடான 'லக்ஸம்பர்க்' குடியுரிமை மற்றும் இதர வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெளிநாடுகளிலேயே தங்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் விசா இன்றி பல நாடுகளுக்குச் செல்ல முடியும் என்பதால் அவர் வெளிநாட்டிலேயே முகாமிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தரப்புடன் நெருக்கமாக அறியப்பட்ட ரத்தீஷ், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் சட்ட அமலாக்கத்துறை மற்றும் காவல்துறையின் விசாரணைகளைத் தவிர்க்கவே வெளிநாடுகளில் தங்கியிருப்பதாக அரசியல் களத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இவ்வழக்கு தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அவரது இருப்பிடம் மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.