இனி எடைக்குறைவு என்ற பேச்சுக்கே இடமில்ல...  ரேஷன் கடைகளில் பாக்கெட்டில் துவரம் பருப்பு, சர்க்கரை! 

 

தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அங்கு வழங்கப்படும் பொருட்கள் தடையின்றி மக்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்ய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. சில ரேஷன் கடை ஊழியர்கள் பொருட்களை எடை போட்டு வழங்குவதில் முறைகேடு செய்வதாகத் தொடர்ச்சியாகப் புகார்கள் எழுந்து வருகின்றன. இதனால் அத்தியாவசியப் பொருட்களைப் பெற வரும் குடும்ப அட்டைதாரர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிப் பாதிக்கப்படுகின்றனர்.

எடை குறைவு மற்றும் விநியோக முறைகேடுகளால் நியாயவிலைக் கடைகளில் நுகர்வோர் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாகத் துவரம் பருப்பு மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை பாக்கெட்டுகளில் அடைத்து வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரின் இந்தக் கோரிக்கையை ஏற்றுச் செயல்படுத்தத் தமிழ்நாடு அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதன்மூலம் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்தித் தகுதியான எடையில் அத்தியாவசியப் பொருட்கள் கார்டுதாரர்களுக்குக் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் சர்க்கரையை பாக்கெட்டுகளில் அடைத்து வழங்கும் இந்த புதிய திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. முறைப்படுத்தப்பட்ட எடையில் தரமான பொருட்கள் நேரடியாகக் குடும்ப அட்டைதாரர்களுக்குச் சென்று சேர்வதை இந்த திட்டம் உறுதி செய்யும். இந்த முக்கிய நடைமுறை மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரவிருக்கும் மாநில பட்ஜெட்டில் வெளியாகக் கூடும் எனத் தெரிகிறது. அரசின் இந்த புதிய முயற்சி குடும்ப அட்டைதாரர்கள் மத்தியிலும் பொதுமக்கள் இடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.