ஆழ்வார்பேட்டையில் ஜனநாயக கடமையாற்றிய தனுஷ் - வரிசையில் நின்று வாக்களித்த ‘ராயன்’ நாயகன்!

 

சென்னை மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு இன்று காலை நடிகர் தனுஷ் வருகை தந்தார்.

எளிமையான உடையில் வந்த தனுஷ், மற்ற வாக்காளர்களைப் போலவே வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். வாக்குப்பதிவு செய்த பிறகு, வெளியே வந்த அவர் செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களை நோக்கித் தனது மை வைத்த விரலைக் காட்டிப் புன்னகைத்தார். எந்தவித அரசியல் கருத்துகளையும் தெரிவிக்காமல், அமைதியான முறையில் தனது கடமையை முடித்துவிட்டு அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார்.

இன்று காலை முதலே இதே ஆழ்வார்பேட்டை பகுதியில் நடிகை த்ரிஷா, நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் வாக்களித்துள்ளனர். தனது பிஸியான படப்பிடிப்புப் பணிகளுக்கு மத்தியிலும் தனுஷ் சென்னை வந்து வாக்களித்திருப்பது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.