அக்டோபரில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

 

இந்தியாவில் நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில் பண்டிகைகள் மற்றும் வார விடுமுறை நாட்கள் போக மொத்தம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வழக்கமான ஞாயிற்றுக்கிழமைகள் (4 நாட்கள்) மற்றும் மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள் ஆகிய நாட்கள் வார விடுமுறையாக அமைகின்றன.

காந்தி ஜெயந்தி, விஜயதசமி, சரஸ்வதி பூஜை மற்றும் இதர முக்கியப் பண்டிகை நாட்களை முன்னிட்டு அக்டோபர் மாதத்தில் மட்டும் மொத்தம் 16 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.