ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு!
ஆகஸ்ட் மாதத்திற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் தற்போதைய 5.25% என்ற அளவிலேயே தொடரும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றமான சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக எச்சரிக்கை நடவடிக்கை அவசியமாகிறது. உலக அளவில் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் சாத்தியமான பணவீக்க அச்சங்கள் ஆகியவை வட்டி விகிதத்தை அப்படியே வைத்திருக்க முக்கியக் காரணங்களாக அமைகின்றன.
பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதோடு, அதே நேரத்தில் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க 'பொறுத்துிருந்து கவனிக்கும்' அணுகுமுறையை ஆர்பிஐ பின்பற்றும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லாத பட்சத்தில், வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றிற்கான மாதத் தவணை மற்றும் நிலையான வைப்புத் தொகைகளுக்கான வட்டி விகிதங்கள் தற்போதைக்கு மாறாமல் சீராகத் தொடரும்.