ஆர்சிபி மீண்டும் கோப்பை வெல்லும் … இர்பான் பதான் நம்பிக்கை!
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்று 18 ஆண்டுகால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்தது. அந்த வெற்றியில் விராட் கோலியின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. இந்த நிலையில் மார்ச் 28ஆம் தேதி தொடங்கும் புதிய தொடரிலும் அவர் அதே உற்சாகத்துடன் களமிறங்குவார் என முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய இர்பான் பதான், கடந்த முறையில் கோப்பையை வென்ற பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆர்வம் கோலியிடம் இருக்கும் என்று கூறினார். வெற்றி பெற வேண்டும் என்ற தீவிரம் எப்போதும் அவரிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த தொடரில் தொடக்க வீரராக களமிறங்கிய கோலி 15 இன்னிங்ஸ்களில் 657 ஓட்டங்கள் எடுத்து சிறப்பாக விளையாடியிருந்தார்.
இந்த முறையும் அதே உற்சாகத்துடன் கோலி விளையாடுவார் என இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோலியின் தற்போதைய ஆட்டத் திறன் பெங்களூரு அணிக்கு பெரிய பலமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். தொடக்கத்திலிருந்தே வலுவாக ஆடினால் அணி மீண்டும் கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகம் என கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படுகிற