'முதல்வர் கோப்பை' விளையாட்டுப் போட்டிகள் - ஆகஸ்ட் 31 வரை பதிவு செய்ய வாய்ப்பு!

 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘முதல்வர் கோப்பை’ விளையாட்டுப் போட்டிகளுக்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ள நிலையில், விருப்பமுள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்கள் tncmtrophy.sdat.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தங்களது பதிவை முடிக்க வேண்டும். கடந்த ஆண்டில் 38 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு போட்டிகளின் எண்ணிக்கை 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வில்வித்தை, துப்பாக்கிச் சுடுதல், யோகா மற்றும் மல்லர்கம்பம் போன்ற பாரம்பரிய மற்றும் நவீன விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டு போட்டிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.