சக நடிகைகளுடன் உறவு.. மனைவியின் குற்றச்சாட்டுக்கு நடிகர் கோவிந்தா விளக்கம்!
பிரபல இந்தி நடிகர் கோவிந்தா (63), சக நடிகைகளுடன் நெருக்கமாக இருப்பது குறித்த தன் மனைவி சுனிதா அகுஜாவின் குற்றச்சாட்டுகளுக்குத் தனது பாணியில் பதிலளித்துள்ளார்.
63 வயதாகும் கோவிந்தா, இளம் நடிகை கோமல் ராணி சுவாங்கருடன் நெருக்கமாக இருப்பது அவரது மனைவி சுனிதாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு கட்டங்களில் கோவிந்தா தன்னை ஏமாற்றிவிட்டதாக சுனிதா பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
தன் மீதான அதிகப்படியான அன்பு மற்றும் உரிமையின் காரணமாகவே மனைவி சுனிதா இதுபோன்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாகக் கோவிந்தா தெரிவித்துள்ளார்.
தான் திரையுலகில் பரபரப்பாக நடித்துக்கொண்டிருந்த காலத்தில், தனது குடும்பத்தைக் கவனித்துக்கொண்டு குழந்தைகளை வளர்த்ததில் மனைவியின் பங்கு மிகவும் மகத்தானது எனப் பாராட்டினார். சக நடிகைகளுடன் தனக்கு இருந்த தொடர்பு குறித்துப் பேசிய அவர், அது திரையில் நடிக்கும் போது ஏற்படும் இயல்பான கெமிஸ்ட்ரி என்றும், அது அன்பின் அடிப்படையிலான ஒரு பிணைப்பு மட்டுமே என்றும் விளக்கம் அளித்துள்ளார்.