பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு - தேதிகள் விவரம்!

 

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணையைப் பள்ளிக் கல்வி இயக்ககம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

1 மற்றும் 2-ம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 24-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

3 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குச் செப்டம்பர் 16-ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி செப்டம்பர் 24-ஆம் தேதி வரை காலாண்டுத் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குச் செப்டம்பர் 16-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 25-ஆம் தேதி வரை காலாண்டுத் தேர்வுகள் நடைபெறும்.