இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு உயர்வு... புதிய சாதனை!
Sep 5, 2026, 12:00 IST
இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 28-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் மொத்த அன்னிய செலாவணி கையிருப்பு 11.47 பில்லியன் டாலர் அதிகரித்து, 740.80 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 9-வது வாரமாக நாட்டின் கையிருப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த வார நிலவரப்படி, நாட்டின் அன்னியச் செலாவணி சொத்துகள் 600.67 பில்லியன் டாலராகவும், தங்கத்தின் கையிருப்பு 116.41 பில்லியன் டாலராகவும் உயர்ந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. உலகளாவிய பொருளாதாரச் சூழல்களுக்கு மத்தியில் இந்தியாவின் பொருளாதார ஸ்திரத்தன்மையை இந்தச் சாதனை மேலும் வலுப்படுத்தியுள்ளது.