அமெரிக்க உளவுத்துறை தலைவி துளசி காபார்ட் ராஜினாமா!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான ஆட்சியில் தேசிய உளவுத்துறை இயக்குநராகப் பணியாற்றி வந்த துளசி காபார்ட் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். மிக உயரிய பாதுகாப்புப் பொறுப்பில் இருந்த அவர், தனது கணவரின் கடுமையான உடல்நலக் குறைவு காரணமாக இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தனது விலகல் கடிதத்தை அதிபர் டொனால்டு டிரம்ப் வசம் அவர் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளார்.
இதுகுறித்து டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், துளசி காபார்ட் தனது பதவிக் காலத்தில் மிகச்சிறப்பான பணிகளைச் செய்துள்ளதாகப் பாராட்டியுள்ளார். அவருடைய கணவர் ஆபிரகாம் என்பவருக்கு அரிய வகை எலும்புப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவருடன் இருந்து கவனித்துக் கொள்ளும் நோக்கில் துளசி காபார்ட் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகும் நான்காவது பெண் அமைச்சர் துளசி காபார்ட் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் 18 உளவு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் முக்கியப் பொறுப்பில் இருந்த இவருக்குப் பதிலாக, புதிய இடைக்கால இயக்குநராக ஆரோன் லூகாஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஜூன் 30 ஆம் தேதியுடன் துளசி காபார்ட் தனது பணிகளில் இருந்து முழுமையாக விலகுகிறார்