நெகிழ்ச்சி.. சட்டப்பேரவையில் 'ஹேப்பி பர்த்டே' பாடிய எம்.எல்.ஏ.க்கள்!
Sep 3, 2026, 12:49 IST
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில், தவெக சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அவை உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தவெக எம்.எல்.ஏ. கருப்பையா அவர்களுக்குப் பிறந்தநாள் என்பது குறிப்பிடப்பட்டது. இதனையடுத்து, பேரவைத் தலைவர் சபாநாயகர் பிரபாகர் அவை உறுப்பினர்களின் சார்பில் அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
சபாநாயகரின் வாழ்த்தைத் தொடர்ந்து, அவையிலிருந்த பிற சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கைதட்டி, 'ஹேப்பி பர்த்டே டூ யூ' எனப் பாடல் பாடித் தங்களது வாழ்த்துகளை அன்போடு பரிமாறிக் கொண்டனர்.