நெகிழ்ச்சி... வளைகாப்பு விழாவில் கர்ப்பிணிகளுக்கு 7 வகையான சீமந்த உணவுகளைப் பரிமாறிய அமைச்சர்!

 

சென்னை தி.நகரில் நடைபெற்ற சமூக வளைகாப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் என்.ஆனந்த், கர்ப்பிணிப் பெண்களுக்குச் பாரம்பரிய முறையில் ஏழு வகையான சீமந்த உணவுகளை பரிமாறிச் சிறப்புச் செய்துள்ளார்.

சென்னை சர். பிட்டி தியாகராயா கலையரங்கத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

இச்சமுதாய வளைகாப்பு விழாவுக்கு அமைச்சர் என்.ஆனந்த் தலைமை தாங்கி, கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான சீமந்தப் பொருட்களை வழங்கிச் சிறப்பித்தார்.

விழாவில் கலந்துகொண்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புளி சாதம், பொங்கல், தேங்காய் சாதம் உள்ளிட்ட பாரம்பரியம் மிக்க 7 வகையான சீமந்த உணவுகள் பரிமாறப்பட்டன. கர்ப்பிணிகளுடன் அமர்ந்து தாமும் அந்த உணவை அருந்திய அமைச்சர், தாய்மார்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.