E20 பெட்ரோலுக்கு எதிர்ப்பு... ஆக.4ல் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி!
பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கப்படும் E20 எரிபொருள் கொள்கையால் வாகனங்களுக்குப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறி, டெல்லி டாக்ஸி மற்றும் சுற்றுலாப் போக்குவரத்துச் சங்கங்கள் சார்பில் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
E20 பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்களின் எரிபொருள் மைலேஜ் கணிசமாகக் குறைகிறது. வாகனங்களின் இன்ஜின் பாகங்கள் சேதமடைந்து, அடிக்கடி பழுது ஏற்படும் சூழல் உருவாகிறது. இன்ஜின் பாதிப்புகளால் வாகனங்களின் மாதாந்திரப் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புச் செலவு பலமடங்கு அதிகரிக்கிறது. பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு காணப் போக்குவரத்துச் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள்.
குறிப்பாக 2015-ஆம் ஆண்டிற்கு முன் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களின் இன்ஜின்களுக்கு E20 எரிபொருள் உகந்ததா என்ற மிகப்பெரிய சந்தேகம் வாகன உரிமையாளர்களிடையே நிலவுகிறது. இந்தச் சந்தேகங்களைத் தீர்க்கவும், பாதிப்புகளைக் களையவும் மத்திய அரசு உடனடியாக வாகன உரிமையாளர்கள், வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் பங்கேற்கும் முத்தரப்புக் கலந்தாய்வுக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.