undefined

கிரிக்கெட் போட்டி மல்யுத்தமாக மாறிய பயங்கர சம்பவம்.. வைரலாகும் பங்களாதேஷில் நடந்த களேபரம்..!

 
பங்களாதேஷில் நடைப்பெற்ற சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் போட்டியின் இடையே அடிதடி நடந்த சம்பவம் பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது.

இந்தியாவில் எப்படி சினிமா பிரபலங்கள் ஒன்றிணைந்து கிரிக்கெட் போட்டுயை நடத்துவார்களோ அதைப் போல் பங்களாதேஷ் நாட்டில் உள்ள சினிமா பிரபலங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கிரிக்கெட் போட்டி நடத்தி வருகின்றனர். அதில் பங்களாதேஷ் சினிமா தயாரிப்பாளர்கள் முஸ்தபா கமல் ராஜ் மற்றும் தீபங்கர் தீபன் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வந்தது. 

இந்நிலையில் போட்டி நட்ந்துக் கொண்டிருக்கும் போது போட்டியின் நடுவே நடுவரின் தீர்ப்பு தவறாக இருக்கிறது என்று இரண்டு அணியைச் சேர்ந்த நட்சத்திரங்களும் தண்ணீர் பாட்டில்கள், பேட், பந்து எனக் கையில் கிடைத்ததை எடுத்து எறிந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனனர்.ஒரு கட்டத்தில் கலவரம் முற்ற  அங்கிருந்த நடிகைகளையும் தங்களை தாக்கி கொண்டுள்ளனர்.